search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்செஸ்டர் யுனைடெட்"

    வாரம் ஐந்து லட்சம் பவுண்டு சம்பளத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் அலெக்சிஸ் சான்செஸ்-ஐ யுவான்டஸ், இன்டர் மிலன் அணிகள் வாங்க பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
    சிலி கால்பந்து வீரர் அலெக்சிஸ் சான்செஸ். இவர் அர்செனல் அணிக்காக விளையாடி வந்தார். அங்கிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறினார். யுனைடெ் அவருக்கு வாரத்திற்கு ஐந்து லட்சம் பவுண்டு சம்பளமாக வழங்கியது. இருந்தாலும் சான்செஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.



    இதனால் ஐந்து லட்சம் பவுண்டு சம்பளம் கொடுக்க வேண்டுமா? என்று மான்செஸ்டர் யுனைடெட் யோசித்து வந்தது. இந்நிலையில் இத்தாலி செர்ரி-ஏ லீக் அணிகளான யுவான்டஸ் மற்றும் இன்டர் மிலன் அணிகள் அவரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
    யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். #ManUnited #EPL
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தவரிசையில் 6-வது இடம்பிடித்து யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.

    இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.



    முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
    2018-19 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு அறிவிக்கப்படும் பிரிமீயர் லீக் கால்பந்து அணியில் பால் போக்போவிற்கு இடம் கிடைத்துள்ளது. #PremierLeague
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு நடைபெறும் உலகின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். இதில் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் உள்பட பல முன்னணி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு பிரிமீயர் லீக் அணி அறிவிக்கப்படும். இந்த அணியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரரான பால் போக்பா இடம் பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணியைத் தவிர்த்து இடம் பிடித்த ஒரே வீரர் இவர்தான்.

    பிரிமீயர் லீக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்டி ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்னாண்டினோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).
    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதியின் முதல் லெக்கில் பார்சிலோனா, டோட்டன்ஹாம், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #UCL
    ஐரோப்பா நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெறும். 2018-19 சீசனில் பார்சிலோனா, யுவான்டஸ், அஜாக்ஸ், போர்ட்டோ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹாம், லிவர்பூல் காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதியின் முதல் லெக் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் இடையிலான ஆட்டத்தில் டோட்டன்ஹாம் 1-0 என வெற்றி பெற்றது.



    லிவர்பூல் - போர்ட்டோ இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் - அஜாக்ஸ் இடையிலான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் இடையிலான ஆட்டத்தில் பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.
    பார்சிலோனா ரசிகர்களுக்கான டிக்கெட் விலையை உயர்த்திய நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு மானிய விலையில் டிக்கெட் வழங்குகிறது. #UCL #ManUnited
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஒன்றில் பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டில் அடுத்த மாதம் 11-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

    2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான நவு கேம்ப் மைதானத்தில் 17-ந்தேதி நடக்கிறது. இரண்டு அணி ரசிகர்களும் போட்டிகளை பார்க்க இங்கிலாந்துக்கும், ஸ்பெயின் நாட்டிற்கும் செல்வார்கள்.

    2-வது லெக் போட்டியை பார்ப்பதற்காக மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு பார்சிலோனா 4610 டிக்கெட்டுக்கள் ஒதுக்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 102 பவுண்டு (134 டாலர்) விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை மிகவும் அதிகம். அதனால் போட்டியை புறக்கணிப்போம் என்று மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

    இதனால் முதல் லெக் போட்டியை ஓல்டு டிராஃபோர்ட் வந்து பார்க்க வரும் பார்சிலோனா ரசிகர்களுக்கான டிக்கெட் விலையை மான்செஸ்டர் யுனைடெட் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் கிடைக்கும் வருமானத்தை நவு கேம்ப் செல்லும் ரசிகர்களுக்கான டிக்கெட்டிற்கு மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.
    சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 என வீழ்த்தியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். #PSG
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தங்களுடைய சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டியில் அதிக கோல் அடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெற்ற முதல் லெக் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பி.எஸ்.ஜி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெய்மர், கவானி இல்லாமல் பி.எஸ்.ஜி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் பி.எஸ்.ஜி. வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 53-வது நிமிடத்தில் அந்த அணியின் ப்ரெஸ்னெல் கிம்பெம்பே முதல் கோல் அடித்தார். 60-வது நிமிடத்தில் கிலியான் மப்பே ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி. 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு மான்செஸ்டர் அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே பி.எஸ்.ஜி. 2-0 என வெற்றி பெற்றது.
    மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். #ManchesterUnited
    போர்ச்சுக்கலை சேர்ந்த ஜோஸ் மவுரினோ கடந்த 2016-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த சில மாதங்களாக இவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரருமான பால் போக்பா ஆகியோருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது.

    இதற்கிடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணிகளின் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயரை தற்காலிக பயிற்சியாளராக நியமித்துள்ளது.


    சோல்ஸ்க்ஜயர்

    ஜோஸ் மவுரினோ 2004 முதல் 2007 வரை செல்சி அணியிலும், 2008 முதல் 2010 வரை இன்டர் மிலன் அணியிலும் 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணியிலும், 2013 முதல் 2015 வரை செல்சி அணியிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #UCLdraw
    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவில் 1. பார்சிலோனா, 2. ரியல் மாட்ரிட், 3. மான்செஸ்டர் யுனைடெட், 4. மான்செஸ்டர் சிட்டி, 5. அட்லெடிகோ மாட்ரிட், 6. யுவான்டஸ், 7. லிவர்பூல், 8. பிஎஸ்ஜி, 9. ஸ்கால்கே, 10. டோட்டன்ஹாம், 11. புருஸ்சியா டார்ட்மண்ட், 12. லியோன், 13. ரோமா, 14. போர்ட்டோ, 15. அஜாக்ஸ், 16. பேயர்ன் முனிச் ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியன.

    நாக்அவுட் சுற்று போட்டிக்கான அட்டவணை குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இரண்டு முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இதனால் நாக்அவுட் சுற்றிலேயே முன்னணி அணி ஒன்று வெளியேறிவிடும்.



    மற்றொரு ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த லிவர்பூல் பேயர்ன் முனிச் அணியை எதிர்கொள்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் யுவான்டஸை எதிர்கொள்கிறது. பார்சிலோனா லியோன் அணியையும், ரியல் மாட்ரிட் அஜாக்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

    டோட்டன்ஹாம் - புருஸ்சியா டார்ட்மண்ட், மான்செஸ்டர் சிட்டி - ஸ்கால்கே, ரோமா - போர்ட்டோ அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ கோல் அடித்த நிலையிலும், ஓன் கோலால் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என யுவான்டஸை வீழ்த்தியது. #Ronaldo
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் யுவான்டஸ் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. யுவான்டஸ் அணியில் இடம்பிடித்து விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.

    புகழைத் தேடிக்கொடுத்த அணிக்கெதிராக ரொனால்டோ களம் இறங்கியதால் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சொந்த மைதானத்தில் விளையாடியதால் யுவான்டஸ் வீரர்கள் கூடுதல் பலத்துடன் விளையாடினார்கள்.

    ஆனாலும் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் வரை மான்செஸ்டர் யுனைடெட் பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் யுவான்டஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கபட்டது.



    86-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜுயன் மட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. 89-வது நிமிடத்தில் யுவான்டஸ் வீரர் அலெக்ஸ் சான்ட்ரோ ஓன் கோல் அடிக்க பரபரப்பான கட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.

    ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள யுவான்டஸ் 4 போட்டியில் மூன்று வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 4 போட்டியில் இரண்டில் வெற்றி, தலா ஒரு தோல்வி, டிரா மூலம் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    ரொனால்டோவுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் படையெடுத்தனர். ஆனால் ஒருவருக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது. #Ronaldo
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைனெட் அணியும், இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.



    ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் டிசர்ட் விளம்பரங்கள் மூலம் இந்த சீசனில் 625 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன. #EPL
    ஐரோப்பா நாடுகளில் கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ, பண்டேஸ்லிகா போன்ற தொடர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.



    இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.



    இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.



    2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

    அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.

    மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் கிரிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்தது. #EPL #ManUtd #LFC
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிரைட்டன் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-2 வீழ்த்தி பிரைட்டன் அதிர்ச்சி அளித்தது.

    ஆட்டத்தின் 25-வது மற்றம் 27-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தது பிரைட்டன். அதன்பின் 34-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூகாகு ஒரு கோல் அடித்தார். என்றாலும் பிரைட்டன் அணி 44-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரைட்டன் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி போக்பா கோல் அடித்தார். இதனால் பிரைட்டன் 3-2 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.



    நேற்றி நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜேம்ஸ் மில்னர் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 93-வது நிமிடத்தில் (இன்ஜூரி நேரம்) சேடியோ மானே கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. மான்செஸ்டர், லிவர்பூல் அணிகள் தாங்கள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    ×